டிஜிட்டல் கனெக்சன் நிறுவனத்தின் சென்னை தரவு மையத்தின் துவக்க நிகழ்ச்சி சி.இ.ஓ வேலாயுதம் தலைமையில் நடந்தது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்பழனிவேல் தியாகராஜன் மையத்தை திறந்து வைத்தார்.

Published Date: January 13, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

டிஜிட்டல் கனெக்சன் என்ற நிறுவனத்தின் புதிய தரவு மையம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

டிஜிட்டல் கனெக்சன் நிறுவனத்தின் சென்னை தரவு மையத்தின் துவக்க நிகழ்ச்சி சி.இ.ஓ வேலாயுதம் தலைமையில் நடந்தது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மையத்தை திறந்து வைத்தார்.

சென்னை அம்பத்தூரில் 10 ஏக்க நிலப்பரப்பில் 20 மெகாவாட் அளவுள்ள ஐடி பணிகளை தாங்கும் அளவுக்கு இம்மையத்தின் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் 'ஜியோ' நிறுவனம் மற்றும் 'புரூக்பீல்டு' நிறுவனங்களுடன் இணைந்து இந்த தரவு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. 

அமைச்சர் தியாகராஜன் பேசுகையில் வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த சென்னை மாநகருக்கும், தமிழகத்துக்கும் இந்த மையம் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

Media: DAILYTHANTHI